who did not show up to pay their last respects to the captain: கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி விஜய்காந்தின் உடல்நிலை பின்னடைவு அடைந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவருடைய உயிர் பிரிந்து விட்டது. இவருடைய இறப்பு செய்தியை கேட்ட தமிழ்நாடு மக்கள் ஆங்காங்கே கடலென திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திட்டு போனார்கள். அத்துடன் திரை பிரபலங்களும், அரசியல்வாதிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் சில நடிகர்களால் விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வர முடியாமல் போய்விட்டது. அதற்கு ஒவ்வொரு காரணத்தையும் சொல்லி நாங்கள் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் மாட்டிக் கொண்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வந்திருக்க முடியும், கேப்டனின் இறுதிச்சடங்கிலும் கலந்து இருக்கலாம்.
முக்கியமாக அஜித், சூர்யா, சிம்பு, கார்த்தி, தனுஷ் இவர்கள் யாருமே வரவில்லை. அது மட்டும் இல்லாமல் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் விஷால் கூட ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய கடமை முடிந்து விட்டதாக நினைத்து விட்டார். ஆனால் செய்நன்றி மறந்த சினிமாக்காரர்கள் கொஞ்சமாவது நன்றியுடன் இருந்திருக்கலாம் என்று ப்ளூசட்டை மாறன் ஒவ்வொருவரையும் வறுத்தெடுத்து வருகிறார்.
Also read: விஜய்காந்தை பற்றி வாய்க்கூசாமல் அவதூறாக பேசிய பச்சோந்தி.. தரம் தாழ்ந்து போன நடிகர்
ஏனென்றால் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் பொழுது ஒரு நடிகருக்கு இந்த நிலைமை இருக்கும் பட்சத்தில் கூடவே இருந்து என்னெல்லாம் செய்ய வேண்டும் என்று முன்னாடி இருந்து விஜயகாந்த் செய்து காட்டி இருக்கிறார். அதை பார்த்தும் கொஞ்சம் கூட திருந்தாத இந்த நடிகர் சங்கம் கொஞ்சம் கூட எட்டி வந்து பார்க்கவில்லை.
இப்படி இருக்கும் பட்சத்தில் புத்தாண்டை மட்டும் சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொருவரும் வெளிநாட்டில் நியூ இயர் செலிப்ரேஷனை கொண்டாடி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் வருகிற 6ம் தேதி “கலைஞர் 100” கலைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தற்போது அவசர அவசரமாக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்ப இருக்கிறார்கள்.
விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியாத நடிகர்களால் தற்போது கலைஞருக்கு ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் மட்டும் ஓடோடி வருகிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்கள் எல்லாம் விஜயகாந்தின் நன்றியை மறந்து அவர் மூலம் நடிகர் சங்கத்துக்கு கிடைத்த பயனையும் மறந்துவிட்டு இப்படி ஆடுகிறார்கள் என்று கொந்தளிப்புடன் ஒவ்வொருவருடைய முகத்திரையும் கிழித்தெறித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
Also read: கல்லூரி நண்பர்களுடன் கேப்டன் மிரட்டிவிட்ட ஒரே படம்.. 200 நாட்கள் வரை திரையரங்கை அதகளம் செய்த சம்பவம்