திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்தும் ப்ளூ சட்டை மாறன்.. பார்த்திபன் மீது அப்படி என்ன கொலவெறி

ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் சமீபகாலமாக வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கொஞ்சமும் பயப்படாமல் அசால்டாக பேசிவருகிறார் ப்ளூ சட்டை மாறன். இதனால் இவரது யூடியூப் சேனலை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

வலிமை படத்தின் ரிலீஸின்போது அஜித்தை பற்றி கடுமையாக மாறன் விமர்சித்திருந்தார். இதனால் பெரிய சர்ச்சை வெடித்த நிலையில் சமீபத்தில் பார்த்திபன் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ள இரவின் நிழல் படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். அதாவது உலகிலேயே முதல் முறையாக நான்லீனியர் படத்தை பார்த்திபன் எடுத்ததாக சொல்கிறார்.

ஆனால் இதற்கு முன்னதாகவே கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரானில் fish & cat படம் வந்துவிட்டது. இதனால் உலகத்திலேயே சினிமாவிலேயே என்று பார்த்திபன் சொல்வது தேவையில்லாத ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என மாறன் விமர்சித்திருந்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து இருந்தனர். இதுவும் பார்த்திபன் சொல்லி தான் இவ்வாறு செய்தார்கள் என்ற பேச்சுகள் அடிபட்டு வந்தது. தற்போது ஆஸ்கர் விருதுக்காக பார்த்திபன் இரவின் நிழல் படத்தை எடுத்திருந்தார்.

இந்நிலையில் லிங்கன் புக் ஆப் ரெகார்ட்ஸே இப்படத்தை அங்கீகரித்துள்ளது. இதனால் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் முதல் சிங்கள் ஷாட் படமென கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரிக்கவில்லை. ஆனால் அதை விட பெருமை வாய்ந்த குரோம்பேட்டையை தலைமையிடமாக கொண்ட லிங்கன் புக் ஆப் ரெகார்ட்ஸே அங்கீகரித்துவிட்டது. வாழ்த்துக்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

அதாவது வஞ்சகப் புகழ்ச்சி அணி போல பார்த்திபனை புகழ்வதாக சொல்லி ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பார்த்திபனை மாறன் இவ்வாறு மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்தி வருகிறார். அந்த அளவுக்கு பார்த்திபன் மீது ப்ளூ சட்டை மாறனுக்கு என்னதான் கொலைவெறி என்று தெரியவில்லை. ஒருவேளை செருப்பு மாலை அணிந்ததை மனதில் வைத்து கொண்டு தான் இப்படி செய்கிறார் போல.

Trending News