செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜாதியைப் பற்றி பெருமை பேசிய கார்த்தி, வசமாக சிக்கிய வீடியோ.. வெட்ட வெளிச்சமாக்கிய ப்ளூ சட்டை

Actor Karthi Controversy: இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ஜப்பான். இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் மெட்ராஸ் படம் ஒரு ஜாதியை குறித்த படமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னையில் பிறந்து வளர்ந்த பசங்க யாருக்குமே ஜாதி தெரியாது. நான் ஜாதியை பார்த்ததில்லை, அது அவரவர் பார்வையில் இருக்கிறது. இப்போது ஸ்கூலில் எதுக்கு ஒரே மாதிரி சீருடை கொடுக்கிறார்கள். வித்யாசம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். நான் அப்படிதான் வளர்க்கப்பட்டவன். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியாது என்று ஜாதியை எதிர்த்து பேசி பெருமை தேடிக்கொண்டார்.

ஆனால் சில வருடத்திற்கு முன்பு இவருடைய தந்தையும் நடிகருமான சிவக்குமார் ஒரு வீடியோவில், சூர்யா தான் காதல் திருமணம் செய்து பெற்றோரை கஷ்டப்படுத்தினார். நீயாவது அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி உங்க ஜாதியில இருக்க பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்று கார்த்தியிடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கூறியதாக தெரிவித்திருந்தார்.

Also Read: காவிச் சட்டை, குங்குமம் வேஷம் போடணும்.. தில்லா அஜித் மாதிரி இருக்க முடியாது விஜய்? – ப்ளூ சட்டை

அவ்வாறே கார்த்தியும் தன்னுடைய ஜாதியை சேர்ந்த பெண்ணை தான் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டார். அப்படி இருக்கும்போது ஜாதியே தெரியாது, ஜாதியே பார்க்கல என்று வெட்டி பெருமை பேசுவது சமுதாயத்திற்காக போடுற வேஷம்.

அதுமட்டுமல்ல சிவக்குமார் பேசிய இந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. ஆனால் இப்போது பருத்தி வீரனின் ஐடி டீம் தீவிரமாக செயல்பட்டு பதிப்புரிமை மீறல் புகாரை தந்து இந்த வீடியோவை முடக்குகிறார் என்று, சிவக்குமார் பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்த சூர்யா, கார்த்தி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்க்கின்றனர். ‘ஒரு அப்பா அம்மா அவங்க ஆசைய சொல்றாங்க, அதை புரிந்து கொண்டு கார்த்தி அதை செய்வார். இல்லை என்றால் அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்வார். உனக்கு எங்கடா எரியுது!’ என்று ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கின்றனர்.

ஜெயிலர், லியோ படம் ரிலீசான பின்பு அடுத்து ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-ஐ வைத்து இந்த வாரம் ப்ளூ சட்டை மாறன் ஓட்ட பார்க்கிறார். முன்பு சிவகார்த்திகேயனை சீண்டிப் பார்த்த ப்ளூ சட்டை இப்போது கார்த்தியை வம்புக்கு இழுத்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி ப்ளூ சட்டைக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

blue-sattai-twit-cinemapettai
blue-sattai-twit-cinemapettai

Also Read: குடும்பங்கள் கொண்டாடும் 3 ஹீரோக்களுக்கு சரியும் மார்க்கெட்.. SK-வை விடாமல் அசிங்கப்படுத்தும் ப்ளூ சட்டை

Trending News