ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரஜினியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. சார்பட்டா விமர்சனத்தில் செய்த கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கிண்டல் செய்யும் வகையில் சமீபத்திய பேட்டியில் ப்ளூ சட்டை மாறன் நக்கலாக பேசியது இணையத்தில் வைரலாகி சும்மா இருந்த ரஜினி ரசிகர்களை சீண்டிவிட்டுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை பார்த்து பாராட்டாதவர்களே கிடையாது என்கிற அளவுக்கு அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்களில் இந்த படத்தை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் ஆர்யா தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க விட்டார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வைத்துவிட்டார் பா ரஞ்சித்.

முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி என அனைவரது படங்களையும் அதில் இருக்கும் குறைகளையும் கண்டுபிடித்து கடுமையாக விமர்சனம் செய்வதற்கு பெயர் போனவர்தான் ப்ளூ சட்டை மாறன்.

ஆனால் அவரே சார்பட்டா பரம்பரை படத்தை பற்றி நல்ல முறையாக விமர்சனம் செய்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போதும் தேவையில்லாமல் வாய்விட்டு ரஜினி ரசிகர்களை சீண்டியுள்ளார்.

நல்ல படங்கள் எடுக்கும் பா ரஞ்சித் கூட்டிச் சென்று கிடைத்ததை ரஜினிதான் எனவும், இந்த படத்தை பார்த்த பிறகாவது இனி பா ரஞ்சித் பக்கம் ரஜினி வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். கபாலி மற்றும் காலா போன்ற படங்கள் ரஞ்சித்தின் வழக்கமான படங்கள் போல் இல்லாமல் சொதப்பலாக இருந்தது எனவும் ஒரு பரவலான கருத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

bluesattai-review-cinemapettai
bluesattai-review-cinemapettai

Trending News