ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ப்ளூ சட்டை மாறன் பட டைட்டிலை கேட்டு மிரண்ட சென்சார் அதிகாரிகள்.. படத்துக்கு ரெட் கார்டு போட்டுட்டாங்களாமே!

தமிழ் சினிமா உலகம் யாரைப் பார்த்து பயன்படுகிறதோ இல்லையோ பிரபல யூடியூப் சேனலில் புதிய படங்களுக்கு விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் என்பவரை கண்டு அஞ்சி கொண்டிருக்கிறது.

முன்னணி நடிகர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் மொக்க படத்தில் நடித்திருந்தால் வச்சு செய்வதில் வல்லவர். ஒரு கட்டத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களுக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளி கொடுத்தார்.

அப்போதுதான் ரசிகர்களுக்கு புரிந்தது, இவர் வேண்டுமென்றே பிரபல நடிகர்களின் படங்களை கேலி கிண்டல் செய்து விமர்சனம் செய்கிறார் என்று. அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறனுக்கு சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சவால் கொடுத்தார்.

அதாவது இதுவரை இல்லாத புது விதமான கதையில் ஒரு படத்தை எடுத்து கொடு எனவும், அந்த படத்தை தானே சொந்தமாக தயாரிப்பதாகவும் சவால் விட்டு அந்த படத்தை எடுத்துள்ளனர்.

மேலும் அந்த படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து சமீபத்தில் சென்சார் செய்ய அந்த படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் படத்தின் டைட்டிலில் மத்திய அரசை கிண்டல் செய்ததை விட படத்தில் மத்திய அரசை வச்சு செய்துள்ளாராம் ப்ளூ சட்டை மாறன். இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு குரூப் அழுத்தம் கொடுத்த நிலையில் சென்சார்போர்டு அதிகாரிகள் அந்த படத்தை பேண் செய்து விட்டனர் என்பதே தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bluesattaimaran-movie
bluesattaimaran-movie

Trending News