திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய், அஜித் ரேஞ்சுக்கு பந்தா பண்ணும் பாபி சிம்ஹா.. ஒரு தேசிய விருதை வாங்கிட்டு இவர் படுத்தும்பாடு இருக்கே!

100 கோடி சம்பளம் வாங்கும் விஜய், அஜித்தே தங்களுடைய தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கொடுத்து சொன்ன நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்து சத்தம் இல்லாமல் தங்களுடைய வேலையை முடித்துக் கொடுத்து விடுகின்றனர்.

ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை படாதபாடு படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் பாபி சிம்ஹாவை சேர்த்து விடலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கார்த்திக் சுப்புராஜ் தயவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சித்தார்த் கூட்டணியில் வெளியான ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்தார்.

அதில் அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில், தான் ஒரு சரித்திர நாயகன் என்ற ரேஞ்சுக்கு பந்தா செய்து வருகிறாராம்.

பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாராம், ஃபாரின் உணவுகள் தான் சாப்பிடுவாராம், படப்பிடிப்பு தளங்களுக்கு ஆடி, பென்ஸ் போன்ற கார்களில் தான் செல்வாராம். இவருடைய மொத்த செலவும் தயாரிப்பாளர் தான் செய்ய வேண்டுமாம்.

நடிக்க திறமை இருந்து என்ன பண்றது, இவருடைய ஆடம்பரமும் மற்றவர்களை மதிக்காத பண்பும் ஒரு நாள் கண்டிப்பாக உச்சத்தில் இருந்து கீழே சரித்து விடும் என தலையில் அடித்துக் கொள்ளாத அளவுக்கு புலம்புகிறார்களாம் தயாரிப்பாளர்கள். இதனை வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய வீடியோ மூலம் பாபி சிம்ஹாவின் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

bobby-simha-cinemapettai
bobby-simha-cinemapettai

Trending News