ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

புகழ் போதையில் மிதந்த பாபி சிம்மா.. பிரச்சனையை கேட்டு தெறித்து ஓடிய பிரபலங்கள்

நடிக்க வந்த புதிதில் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்து பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தான் பாபி சிம்ஹா. குறுகிய காலத்திலேயே தேசிய விருது வாங்கும் அளவுக்கு அவர் திறமையான நடிகராக இருந்தார். இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கவனம் அவர் மேல் திரும்பியது.

ஆனால் கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால் அவர் தற்போது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். நன்றாக சென்று கொண்டிருந்த சினிமா வாழ்வு அவரின் சில மோசமான நடவடிக்கைகளால் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.

Also read:ஜிகர்தண்டா 2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் பிரபலம்.. 150 கோடியை குறிவைத்த கார்த்திக் சுப்புராஜ்

சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த பாபி சிம்ஹா அதன் பிறகு குணச்சித்திரம் மற்றும் வில்லன் போன்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக இவர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அவர் தற்போது தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர அவருக்கு தற்போது வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் அல்லாடி கொண்டிருக்கிறார்.

அவருடைய இந்த நிலைக்கு காரணம் சில வருடங்களுக்கு முன்பு அவர் அக்னி தேவி என்ற திரைப்படத்தில் நடித்த போது நடந்த பிரச்சனைதான் என்று கூறப்படுகிறது. அப்போது பாபி சிம்ஹா அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் படம் தொடர்பாக நிறைய பிரச்சனை செய்தார்.

Also read:மீண்டும் மகனுடன் புது அவதாரம் எடுக்கும் செந்தில்.. இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்

அது மட்டுமல்லாமல் அந்த பஞ்சாயத்து காவல் நிலையம் மற்றும் நடிகர் சங்கம் வரை சென்றது. அனைவரும் அவரை சமாதானப்படுத்தியும் கூட அவர் பாதி படத்திற்கு மேல் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இப்படி அவர் செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதனால் எதற்கு வம்பு என்று யாரும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய விரும்பவில்லை. இதனால் தற்போது அவரின் சினிமா எதிர்காலமே முடங்கிப் போய் இருக்கிறது. அதை நினைத்து தற்போது வருத்தப்படும் பாபி சிம்ஹா மீண்டும் தன்னுடைய இடத்தை எப்படி பிடிப்பது என்று தீவிர சிந்தனையில் இருக்கிறாராம். நன்றாக வளர வேண்டிய ஒரு நடிகர் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.

Also read:மருதநாயகத்திற்காக ஆக்ராவிலிருந்து வந்த பறவை.. ஆண்டவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்

Trending News