பாலிவுட்டை ஆட்சி செய்வது 3 கான்கள்தான். அது ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் தான். இந்த நிலையில் ஏற்கனவே ஷாருக்கானும், சல்மான் காணும், இணைந்து ஒரு படத்தில் நடித்து அது ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து மீண்டும் இருவரும் கூட்டணி போட உள்ளார்கள். அனால் இந்த கூட்டணியில், மேலும் ஒரு கான் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்த மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்ததில்லை. அதனாலயே இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்ற்னர். இந்த ஐடியா-வை முதலில் கூறியது என்னவோ அமீர் கான் தான். இன்னும் 5 வருடத்தில் தனது ஓய்வை அறிவித்த அமீர் கான், அதற்குள்ள தரமான ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார்.
3000 கோடி வசூலுக்கு தயாராகும் திரைப்படம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், “நாங்கள் மூவரும் இணையும் வகையிலான ஒரு படத்தில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நிச்சயம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்கள்..”
“ஆறு மாதத்துக்கு முன்பே மூவரும் சந்தித்தோம். அப்போது அவர்களிடம், ‘நாம் மூவரும் இணைந்து ஏன் ஒரு படம் பண்ணக்கூடாது’ என்று கேட்டேன்.. அதை கேட்டு அவர்கள் பயங்கரமாக excite ஆகி, ‘ஏன் பண்ணக்கூடாது.. நிச்சயமாக பண்ணலாம்’ என்று கூறினார்கள்.” என்று கூறியுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரே குஷி தான்.
அடுத்ததாக 3000 கோடி வசூலுக்கு இந்த படம் தயாராகிவிடும் என்று எல்லாரும் இவர்களை வைத்து எப்படியான ஒரு கதையை இயக்கலாம் என்று டிஸ்கஸ் செய்து வருகிறார்கள்.
இவர்கள் மூவர் இணைந்தால், நிச்சயம் அனைத்து ரசிகர்களும் வந்து பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.