ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டும் இருக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் இப்படத்தில் இணைந்து இருக்கிறார்.
சமீபகாலமாகவே மல்டி ஸ்டார் படங்கள் நிறைய உருவாகி வருகிறது. கடைசியாக ரஜினி ஹீரோவாக நடித்த ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரீஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
அமிதாப் பச்சனை ஆரத்தழுவிய ரஜினி
வேட்டையன் படத்தில் ரஜினியின் நீண்ட கால நண்பனான அமிதாபச்சன் நடிக்கிறார். இப்போது அவர் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகிறார். இந்நிலையில் ரஜினியை ஆரத் தழுவிய அமுதாபச்சனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் உலக நாயகனுடன் அமிதாபச்சன் நடித்து வருகிறார். அதாவது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்திலும் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதாக கூறப்படுகிறது.
மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்கள்
சமீபத்தில் கல்கி படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் அதில் வயதான தோற்றத்தில் அமிதாப்பச்சன் இருந்தார். மேலும் தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகள் உடன் ஒரே நேரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் நடிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் வேட்டையின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.