ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்த ஆமிர் கான்.. காரணத்தைக் கேட்டு ஷாக்கான கோலிவுட்!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர்தான் விஜய்சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து ரோல்களையும் ஏற்று சிறப்பாக நடித்து, கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த பவானி ரோல் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. தற்போது விஜய் சேதுபதி பாலிவுட் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிக்க பாலிவுட் நடிகரான அமீர்கான் மறுப்பு தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அமீர்கான். இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளன.

vijay-sethupathy-master
vijay-sethupathy-master

தற்போது அமீர்கான் ‘லால் சிங் சந்தா’ எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதி அதிகமாக வெயிட் போட்டு இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடிக்க உள்ள ரோலுக்கு இந்த உடல்வாகு ஏற்றதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அமீர்கான். இதனால் அமீர்கான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமீர்கானின் இந்த வரிகளால் விஜய்சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். அதேபோல் அமீர்கான் விக்ரம், வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்ததற்கு காரணம் விஜய்சேதுபதி அந்தப்படத்தில் நடிப்பது தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

எனவே, அமீர்கானின் இந்த வார்த்தைகளாலும் செயலாலும் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் கோபமடைந்து இருப்பதோடு, ஏமாற்றமடைந்து இருக்கின்றனராம்.

Trending News