ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஷாருக்கானால் பதட்டத்தில் இருக்கும் சல்மான்கான்.. 4 இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட சம்பவம

பாலிவுட் சினிமா உலகிற்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி என்பது கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்து தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடந்த வருடம் என்பது அவர்களுக்கு சோதனை காலம் தான் என்று சொல்ல வேண்டும். தென்னிந்திய சினிமாக்கள் கோலோச்சி கொண்டிருக்க பாலிவுட் சினிமா அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

பாலிவுட் சினிமாவின் கௌரவத்தை காப்பாற்றுவது போல் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முந்தைய இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறது. இது கொஞ்சம் நடிகர் சல்மான் கானுக்கு பயத்தை தான் காட்டி இருக்கிறது. எப்படியாவது அதேபோன்று ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நான்கு தென்னிந்திய இயக்குனர்களுக்கு வலை வீசி இருக்கிறார்.

Also Read:சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறனின் திரைக்கதையின் மீது எப்போதுமே சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. நடிகர்கள் யாராக இருந்தாலும் கதைக்கு ஏற்றார் போல் அவர்களை நடிக்க வைத்து விடுவார். அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.

ராஜமவுலி: ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் இந்தியாவுக்கு ஆஸ்கார் என்னும் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு உலக அரங்கில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

ஷங்கர்: இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் ஆர்சி 15 போன்ற திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கிய நூலான வேள்பாரி கதையை இவர் விரைவில் படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ்: சல்மான்கானின் முதல் தேர்வாக இருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் தற்போது தளபதியின் லியோ திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான இவருடன் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் சல்மான் கான்.

Also Read:விஜய், கமலை போல வாரி வழங்கிய வெற்றிமாறன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு

Trending News