ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

முன்னாள் காதலிக்கு 2.6 கோடி பரிசு கொடுத்த ரன்வீர்.. போட்டி போட்டு சல்மான்கான் என்ன செய்தார் தெரியுமா.?

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காத்ரீனா கைப். அவருக்கும், அவருடைய காதலர் விக்கி என்பவருக்கும் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அவர்களுடைய திருமணத்திற்கு வெகு சிலரை தவிர யாரும் அழைக்கப்படவில்லை. மொத்தம் 120 பேர் மட்டுமே அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர் மேலும் திருமணத்திற்கு வருவோருக்கு மொபைல், கேமரா போன்ற எதுவும் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.

காத்ரீனா இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த ஜோடி பிரிந்தது. அதன் பிறகு அவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த காதலும் அவருக்கு நிலைக்கவில்லை.

தற்போது திருமண வாழ்வில் இணைந்திருக்கும் காத்ரீனா தன்னுடைய முன்னாள் காதலர்களை தன் திருமணத்திற்கு அழைக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் இருவரும் புதுமண தம்பதிகளுக்கு பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன்படி நடிகர் சல்மான் கான் 3 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை அவருக்கு பரிசளித்துள்ளார். அவரை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் 2.7 கோடி மதிப்பு கொண்ட ஒரு வைர நெக்லஸை பரிசாக கொடுத்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் வியப்பாக இருந்தது.

காதல் முறிந்தாலும் தன்னுடைய முன்னாள் காதலிக்கு இவ்வளவு மதிப்பு கொண்ட பரிசுகளை அவர்கள் கொடுத்திருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதுவே நம்ம ஊர் என்றால் சொல்லி வைத்தது போல் எல்லோரும் டீ கப், வால் கிளாக் என்று பரிசளித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் அழைக்காத திருமணத்திற்கு இத்தனை கோடி மதிப்புள்ள பரிசு கொடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

katrina

Trending News