திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உங்க பணத்திமிர எங்கிட்ட காமிகாதீங்க.. அண்ணாச்சியை வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகைகள்

சரவணா ஸ்டோர் நிறுவனரான சரவணன் தன் நடிப்பில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக மற்றும் ஆடியோ லான்ச்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகைகள் லெஜெண்ட் சரவணனை அவமானப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி உள்ளிட்டோரின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தி லெஜண்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க விருப்பமே இல்லை என தெரிவித்து சரவணனை அவமானப்படுத்தியுள்ளார். இதன்பின்னர் பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யாராயை லெஜண்ட் சரவணன் தி லெஜன்ட் படத்துக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு அதிக கோடி சம்பளம் கொடுத்து புக் செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யாராய் அவரை பார்ப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்காததாள் நடிகை ஊர்வசி ரௌட்டலாவை கதாநாயகியாக பல கோடிகள் கொடுத்து புக் செயது நடிக்கவைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தி லெஜண்ட் சரவணன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடிரூபாய் பொருட்ச்செலவில் பிரம்மாணடமாக உருவானது.

கிட்டத்தட்ட 10 நடிகைகளுக்கு 6.5 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து புக் செய்தார். ஆனால் கத்ரீனா கைஃப் வருவதாக சொல்லி திடீரென பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு கழட்டி விட்டார். அப்போது கூட மேலும் இரண்டு கோடி தருகிறேன் என லெஜெண்ட் சரவணன் கூறியாதல் கத்ரீனா உங்கள் பணம் திமிரை எல்லாம் எண்ணிடம் காட்டாதீர்கள் என்று சொல்லி அவமானப்படுத்தியுள்ளார்.

இதனிடைய லெஜெண்ட் சரவணன் தன பணபலத்தை காட்டி நடிகைகளிடம் விலை பேசியதால் இப்படி அவமானப்பட்டுள்ளார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பணத்தை வைத்து யாரையும், எதையும் அவ்வளவு சீக்கிரமாக வாங்க முடியாது என்பதை லெஜெண்ட் சரவணன் புரிந்து கொண்டுள்ளார்.

Trending News