வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தனுஷை பார்த்து மிரளும் பாலிவுட் நடிகை.. எவ்வளவு கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்

தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவரின் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இவரின் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

மேலும் அவர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களாக தனுஷ் பற்றிய பல தகவல்கள் வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. அதில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனுஷுடன் நடிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ் திரைப்படங்களை அதிக அளவில் தயாரித்து வரும் போனிகபூர் தன்னுடைய மகள் ஜான்வி கபூரை தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்த சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவரிடம் ஜான்வி கபூரை, தனுசுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கேட்டுள்ளார்.

ஆனால் போனிகபூர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே வந்த ஒரு பட வாய்ப்பையும் ஜான்வி கபூர் நிராகரித்துள்ளார். தனுஷ், சாரா அலிகான் இணைந்து நடித்திருந்த அத்ரங்கி ரே ஹிந்தி திரைப்படத்தில் முதலில் ஜான்வி கபூர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகுதான் படக்குழு தனுசை அணுகி இருக்கிறது. ஆனால் தனுஷ் நடிப்பதை கேள்விப்பட்ட ஜான்வி கபூர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி இருக்கிறார். அதன் பிறகு அந்த கேரக்டரில் சாரா அலி கான் நடித்தார். இந்த செய்தி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகளிலும் பிரபலமாக நடித்து வரும் தனுஷ் உடன் நடிப்பதற்கு ஜான்வி கபூர் ஏன் மறுத்தார் என்ற ஒரு கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. சமீப காலமாக தனுஷ் குறித்து வரும் சில வதந்திகளால் தான் அவர் இப்படி கூறியிருப்பார் என்றும் திரைஉலகில் பேசப்பட்டு வருகிறது.

Trending News