திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அண்ணாச்சி ஆடியோ பங்க்ஷனுக்கு வர மறுத்த நடிகை.. 2 கோடி கொடுத்தும் பிரயோஜனமில்லை

சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது விளம்பரத்தை தாண்டி சினிமாவிலும் கால்பதித்துள்ளார். அதாவது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நாசர், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக அண்ணாச்சி பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் வரவில்லை. ஆறுதலுக்காக நாசர் மட்டுமே சென்றார். இந்நிலையில் இந்த ஆடியோ பங்ஷன்காக அண்ணாச்சி 6.50 கோடி வரை செலவு செய்துள்ளாராம்.

அதாவது இதில் நடிகைகளுக்கே ஒரு கணிசமான தொகை போய்விட்டதாம். ஏனென்றால் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கு ஒரு பெரும் தொகையை வாரி வழங்கி இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் அண்ணாச்சி. அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அண்ணாச்சி ஒரு பெரிய திமிங்கிலதிற்கே வலை விரித்து உள்ளார் . அதாவது பாலிவுட் நட்சத்திரமான கத்ரீனா கைஃப்யை இந்த விழாவுக்கு அழைத்துள்ளார் அண்ணாச்சி. இதற்காக அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

மேலும் இரண்டரை கோடியை வாங்கிய கத்ரீனா கைஃப் கடைசி நேரத்தில் கம்பியை நீட்டிவிட்டார். அதாவது, என்னால் வர முடியாது எனக் கூறி பணத்தை திருப்பி அனுப்பிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதனால் அண்ணாச்சி செம அப்செட்டில் இருந்தாராம்.

அண்ணாச்சி உடன் விளம்பரத்தில் நடித்தவுடன் அந்த நடிகைகளின் மார்க்கெட் உடனே இறங்கிவிட்டது. இதனால்தான் கடைசி நேரத்தில் கத்ரீனா கைஃப் உஷாராகி வர முடியாது என்று சொல்லிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News