வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

தோல்வி பயம்.. வயித்தெரிச்சலில் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்த முரட்டு வில்லன்

கோலிவுட்டின் இப்போதைய ட்ரெண்டிங்கில் மிக முக்கியமான இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். ‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு தமிழ் மட்டுமில்லாமல், மற்ற மொழி நடிகர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் லோகேஷ் கனகராஜை மிகப்பெரிய நம்பிக்கை நாயகனாக பார்க்கின்றனர்.

நொடிக்கு நொடி திரில்லர், ட்விஸ்ட் என ஒரு காட்சியில் கூட சலிப்பு தட்டாமல் பார்வையாளர்களை கதைக்குள்ளேயே வைக்கும் அளவிற்கு திரைக்கதையில் விறுவிறுப்பை சேர்க்கிறார். ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீசிற்கு முன்பு ‘கைதி’ படத்தை பார்த்து விட்டு ‘விக்ரம்’ படம் பார்க்குமாறு இவரே கூறியிருந்தார். மேலும் விக்ரம் படத்திலும் ஒரு காட்சியில் கைதி பட சீன் ஒன்றை இணைத்திருந்தார். கைதி படத்தில் டில்லி ஒட்டி செல்லும் லாரியை மையப்படுத்தி தான் விக்ரம் படமே.

Also read: ரோலெக்ஸ்க்கு ரெடியான மாஸ் ஸ்டோரி.. அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

படத்தின் கடைசி காட்சியிலும் ரோலக்ஸ் கேட்பது அந்த லாரியில் போன போதைப்பொருள் பற்றி தான். மேலும் அந்த காட்சியில் கைதி படத்தின் முக்கியமான கேரக்டர் அர்ஜுன் தாஸ் வந்திருப்பார். கைதி படத்தில் அவருக்கு கழுத்தில் அடிபட்டு இருக்கும் அதே இடத்தில் காயத்தோடு அர்ஜுன் தாஸ் விக்ரமில் இருப்பார். ‘கைதி’ பட டில்லியும் உத்திரபிரதேசத்தில் இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (LCU): LCU தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. அதாவது லோகேஷின் திரைப்படங்களின் கேரக்டரை வைத்தே அடுத்தடுத்து திரைப்படங்கள் இயக்குவது. ‘கைதி’ டில்லி, ‘விக்ரம்’ ரோலெக்ஸ் இவர்களை இணைப்பது போல தான் ‘விக்ரம்’ 2 கண்டிப்பாக இருக்கும். லோகேஷின் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் ஒரே கதையில் இணைவது போன்ற படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், ‘தளபதி 67’ LCU வின் அடுத்த கதையாக தான் இருக்கும் என வியூகங்கள் எழுகின்றன.

Also read: லோகேஷ் கனகராஜ்க்கு போட்டியாக வரும் இயக்குனர்.. அதே ஐடியாவை கையிலெடுக்கும் முரட்டு நடிகர்

மார்வல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (MCU ): மார்வல் அமெரிக்காவின் மிகப்பெரிய ஊடகம் ஆகும். அவர்களுடைய தயாரிப்பில் வெளிவந்த சூப்பர் மென், ஸ்பைடர் மென், அயர்ன் மென், கேப்டன் அமெரிக்கா, அன்ட் மென் என அத்தனை படங்களின் கதைகளையும் ஒரே கதையாக இணைத்து ஒரு ஒரு பாகமாக வெளியிட்டு வருகிறார்கள். இது உலக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பாலிவுட் நட்சத்திரத்தின் கடுமையான விமர்சனம்: அனுராக் காஷ்யப் பாலிவுட்டின் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். அவரிடம் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் பற்றியும், லோகேஷ் பற்றியும் கேள்விகள் கேட்டபோது கடுமையாக பேசி இருக்கிறார்.

Also read: விக்ரம் படத்தில் சூர்யா நல்லவரா, கெட்டவரா.. விளக்கமாக கூறிய லோகேஷ் கனகராஜ்

மார்வல் யூனிவெர்சை பார்த்து சிலர் காப்பி அடிக்க முயல்வதாகவும் அப்படி செய்தால் அந்த படம் தோல்வி அடையும் எனவும் மறைமுகமாக லோகேஷ் கனகராஜை சாடியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை, போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் அல்லாடி வரும் வயித்தெரிச்சல் தாங்காமல் அனுராக் லோகேஷை விமர்சிப்பதாக கூறுகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News