திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ஊ சொல்றியா மாமா.. ஓஹூ சொல்றியா மாமா.. சமந்தா இடத்தை பிடிக்க போகும் நடிகை

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் வெளியாவதற்கு முன்பே 600 கோடி க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

என்னதான் அல்லு அர்ஜுன் படத்தில் மிரட்டி எடுத்திருந்தாலும், முதல் பாகம் வெற்றியடைய சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் பார்ட் 2-விலும் ஒரு பயங்கரமான டான்ஸ் பாடல் உள்ளது.

சமந்தா இடைத்தை பிடித்த பாலிவுட் நடிகை

முதல் பாகத்தின் வெற்றிக்கு டான்ஸ் பாடல் ஒரு முக்கிய காரணமாக இருந்ததனால், இரண்டாம் பாகத்தில் யார் சிறப்புப் பாடலில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.புஷ்பா படம் வட இந்தியாவில் வெற்றி பெற்றதால், சுகுமார் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

மாடல் மற்றும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் சிறப்புப் பாடலில் நடிப்பதாக வதந்திகள் பரவின. மேலும் த்ரிப்தி டிமிரி, ஸ்ரீ லீலா போன்றவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட, அவர் ஓகே சொல்லிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரத்தா கபூர் ஏற்கனவே பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்திருந்தார். இது உண்மையானால், வட இந்தியாவில் புஷ்பா 2 படம் வேற லெவல் ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Trending News