செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாராவும் இல்ல த்ரிஷாவும் இல்லை.. அஜித்துடன் இணைய போகும் பாலிவுட் ஹீரோயின்

அஜித் நடித்த துணிவு திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்புடன் இருந்த ரசிகர்கள் இன்று முதலே தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு புறம் இருக்க அஜித் அடுத்ததாக நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தானம் ஆகியோர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து இப்போது ஹீரோயின் யார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் சம்மதித்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் அவர் இணைந்துள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

Also read: சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

அதைத்தொடர்ந்து தீவிர ஹீரோயின் வேட்டையில் இறங்கிய விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன்தாராவை அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிளான் போட்டார். ஆனால் அஜித் அந்த நினைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார். அதனால் தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.

அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த ஹுமா குரோஷியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏனென்றால் வலிமை திரைப்படத்தில் இவர் சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாம். இதனால் அவருக்கு படக்குழு மீது சற்று அதிருப்தி இருந்திருக்கிறது.

Also read: பிரச்சனை மேல் பிரச்சனையில் ஏகே 62.. விக்னேஷ் சிவன், நயன்தாரா பண்ணும் ஓவர் சொதப்பல்

அந்த வருத்தம் இன்னும் கூட அவருக்கு இருக்கிறதாம். அதனால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்தும் நோக்கில் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது பேச்சுவார்த்தை அனைத்தும் சமூகமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா இருவரில் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் பாலிவுட் ஹீரோயினுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் பொங்கலுக்கு பிறகு ஆரம்பிக்கப்படும் இந்த படத்தில் இன்னும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்கள் இருக்கிறதாம். அதற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: வாரிசு பட கோவை சரளாவுக்கு இத்தனை கோடியா.. நயன்தாராவை ஓவர்டேக் செஞ்சிட்டாங்க போல

Trending News