Bollywood’s hit director is coming to see Vijay: “அண்ணா வாங்கண்ணா! வாங்கண்ணா!” என்று ரசிகர்கள் உசுப்பேத்த “நான் ரெடி தான் வரவா!” என்று களத்தில் குதித்து விட்டார் தளபதி. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத செயல்களை செய்து, ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோ தான் என்று நிரூபித்து வருகிறார் தளபதி.
தமிழக வெற்றி கழகம் எனது கட்சியை அறிவித்தவர். இப்பொழுது கட்சியின் செயலியை அறிமுகப்படுத்தி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மும்முரமாகிவிட்டார். தமிழகத்தை தாண்டி தென்னிந்தியாவின் பல இடங்களிலும் உறுப்பினர்கள் வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கில் உறுப்பினர்கள் இந்த செயலியை பயன்படுத்தியதால் சர்வரே டவுன் ஆகும் அளவிற்கு சென்றது. எம் ஜி ஆரை போல் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெருவாரோ என்று அரசியல் புள்ளிகள் பலருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது.
ஒரு பக்கம் விஜய்யை முன்னேற விட முடியாதபடி அரசியல் கட்சிகள் பலவும் சேர்ந்து சதி வலையை பின்ன, மாற்றத்தை கொடுக்கும் தலைவனாக சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்து விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
அரசியல் பணியை மேற்கொள்ளும் பொருட்டு விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்துடன் நிறைவு செய்ய உத்தரவு இட்டுள்ளாராம். அதன் பின் முழு நேர அரசியல்வாதியாக தேர்தலில் களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த பாசமலர் அட்லீ விஜய்யை காண வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் இந்த கருஞ்சிறுத்தை அம்பானி வீட்டு கல்யாணத்தில் பலரையும் திரும்ப வைத்து, அவரது இயக்கத்தில் நடிக்க ஏங்க வைத்தது. பாலிவுட்டிலேயே பாய் போட்டு படுத்து செட்டிலாகி விட்ட அட்லீ, அண்ணனை காண சென்னை ஏர்போர்ட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் அடுத்ததாக இன்று மாலையோ அல்லது நாளையோ தளபதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூற உள்ளதாக தகவல். அண்ணனுக்காக ஒரு அரசியல் படம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.