தமிழ் சினிமாவில் 80களில் உச்சத்தில் இருந்தவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல சினிமா இசை கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1986 இல் அவரது ரசிகர்கள் அனுப்பிய பரிசு பொட்டலத்தில் வெடிகுண்டு அனுப்பப்பட்டிருந்தது. அந்த பார்சலை திறக்கும்போது வெடிகுண்டு வெடித்து அவருடைய இரண்டு உள்ளங்கைகளிலும் காயம் ஏற்பட்டது. அவருடைய வலது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பின்பு பலவருட சிகிச்சைக்குப் பிறகு பார்வையைப் பெற்றார். இதனால்தான் எப்பொழுதுமே கையில் ஒரு கிளவுஸ் போட்டு இருப்பார் சங்கர் கணேஷ். அப்போது சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.
அப்போது இளையராஜாவின் இசை அவ்வளவாக அங்கீகாரம் பெறவில்லை. இதனால் சங்கர் கணேஷ் மீது போட்டி, பொறாமை காரணமாக இளையராஜா தான் ஷங்கர் கணேஷ் வீட்டிற்குப் வெடிகுண்டு அனுப்பப்பட்டதாக அப்போது வதந்திகள் வந்தது.
ஆனால் சேலத்தைச் சேர்ந்த கவிஞர் கந்தசாமி என்ற நபர் இசை சம்பந்தமாக சங்கர் கணேஷ்க்கு அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனையால் கந்தசாமி, சங்கர் கணேஷ் வீட்டுக்கு கொரியரில் வெடிகுண்டு அனுப்பி உள்ளார்.
குண்டு வெடிப்பு நடந்து ஒரு வாரத்திற்குள் கவிஞர் கந்தசாமியை போலீஸ் பிடித்து விட்டனர். அவருடைய தண்டனை காலம் முடிந்த பிறகு வெளியே வந்ததும் அவரது கவிஞர் கனவு மண்ணோடு மண்ணாக போய்விட்டது.