மணிரத்தினம் சொன்ன ஒரே ஒரு மாற்றத்தை செய்ய முடியாது எனக் கூறி சூப்பர் ஹிட் பட வாய்ப்பை விக்ரம் வேண்டாம் என்று கூறி விட்டு விலகியது மணிரத்தினத்திற்கே பெரும் அதிர்ச்சியைத் கொடுத்ததாம்.
உலக அளவில் தமிழ் சினிமாவை வியந்து பார்க்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். காதல் படமாக இருந்தாலும் சரி கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் சரி. மணிரத்தினம் கெத்து தான்.
கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் என்ற கேங்க்ஸ்டர் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தற்போது சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாம்பே. அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் அந்த படத்தில் முதன் முதலில் ஒப்பந்தமானவர் விக்ரம் தானாம்.
அப்போது புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருந்த விக்ரமை சேவ் செய்ய சொன்ன ஒரே காரணத்திற்காக பாம்பே பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விக்ரம். தற்போது விக்ரம் மணிரத்தினம் படத்தில் நடித்து வருவதால் இந்த செய்தி கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.