உலக அளவில் வசூல் வேட்டையாடிய வலிமை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த போனி கபூர்

ajith kumar boney kapoor
ajith kumar boney kapoor

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அஜீத் மீண்டும் அதே கூட்டணியில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது வலிமை திரைப்படம் பல கோடி வசூலித்தது என்று தகவல்கள் வெளிவந்தாலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்தது.

ஆனால் போனி கபூர் தற்போது வலிமை திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறியிருக்கிறார். இந்த செய்தியால் தற்போது அஜித்தின் ரசிகர்கள் அதிக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதேபோன்று சமீபகாலமாக வெளியாகும் தமிழ் திரைப்படத்தின் வசூல் நிலவரங்களை தயாரிப்பாளர்கள் அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட் ஆக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான். சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் இந்த திரைப்படம் அதிக அளவில் வசூலை பெற்று வருகிறது.

மேலும் இதுவரை டான் திரைப்படம் 100 கோடி வரை வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தற்போது அறிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் இதைவிட இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா கலெக்ஷனை பொறுத்த அளவில் மாஸ் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner