புதன்கிழமை, நவம்பர் 13, 2024

விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் படுவேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கமுக்கமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

Also read:அஜித் விஷயத்தில் மூக்க நுழைக்காதிங்க.. விஜய் போட்ட கண்டிஷன்

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதனால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு பயங்கரமாக பிசினஸ் ஆகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதை தயாரிப்பாளர் மிகவும் ரகசியமாக செய்து வருகிறாராம். இந்த அளவுக்கு படம் வியாபாரம் ஆகும் என்று பட குழுவினரே யூகிக்காத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு படத்தை தயாரிப்பாளர் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட போனி கபூர் தற்போது இடிந்து போய் இருக்கிறாராம்.

ஏனென்றால் அவர் அஜித்தை வைத்து தற்போது தயாரித்து வரும் ஏகே 61 திரைப்படம் இன்னும் சூட்டிங் முடியாமல் இழுத்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் படத்திற்கு சரியான பைனான்ஸ் கிடைக்காமல் தயாரிப்பாளர் போனி கபூர் அல்லாடி கொண்டு இருக்கிறாராம். இதனால் சில மாதங்கள் சூட்டிங் நடைபெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also read:சூட்டிங்கிற்கு முன்பே பல கோடிகளை அள்ளிய தளபதி 67.. இது தான் வியாபார தந்திரமா!!

தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கும் அவர் சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட முடியுமா என்ற யோசனையிலும் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தின் பிசினஸ் டாப் கியரில் செல்லும் பொழுது ஏகே 61 இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.

மேலும் அஜித் படம் முழுவதும் ரெடியானதும் பிசினஸ் செய்து கொள்ளலாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போனி கபூர் நிலைகுலைந்து போயிருக்கிறார். தற்போது போட்ட பட்ஜெட்டை விட படத்தின் பட்ஜெட் எகிறி இருப்பதும் அவருடைய பதட்டத்திற்கு காரணமாக இருக்கிறது. அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் படத்தை எப்படியாவது நல்ல விலைக்கு பிசினஸ் செய்து விட வேண்டும் என்று அவர் தீவிரம் காட்டி வருகிறாராம்.

Also read:மீண்டும் வேகமெடுக்கும் ஏகே 61.. பம்பரமாக சுழன்று நடிக்க போகும் அஜித்

- Advertisement -spot_img

Trending News