வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

AK-61 வலிமை போல் இருக்காது.. ரிலீஸ் தேதியை வெளியிட்ட போனிகபூர்

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் படத்தில் அஜித் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப்படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது ஏகே 61 திரைப்படம் தற்போது 35 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்துள்ளது. வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது.

மிகக் குறுகிய காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டி இருப்பதால் படக்குழுவினர் தற்போது படு வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த திரைப்படம் வலிமை படம் போல் நீண்ட நாள் இழுக்காமல் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இதைப்பற்றி போனிகபூர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் தற்போது அஜித்தின் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அஜித்தின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவருகிறது.

இதைத் தொடர்ந்து அஜீத் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இந்த படங்கள் அடுத்த வருடத்தில் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. சமீபகாலமாக வருடத்திற்கு ஒருமுறை படங்களில் நடித்து வந்த அஜீத் தற்போது அதை மாற்றி தீவிரமாக களத்தில் குதித்திருக்கிறார்.

Trending News