வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை பார்த்து பயந்த போனி கபூர்.. ஒரே வார்த்தையால் தைரியம் கொடுத்த அஜித்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி இருக்கும் துணிவு திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்பு விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் தான் சோசியல் மீடியாவில் அதிக பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. ஆனால் அதை ஓரம் கட்டும் அளவுக்கு துணிவு முதல் பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதல் இருப்பதால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே தற்போது யார் இந்த ரேசில் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது.

Also read: தளபதி 67 க்கு அட்டகாசமாக ரெடியான விஜய்.. சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் இதைத்தான் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதே போன்ற படபடப்பும், பதட்டமும் துணிவு தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இருந்திருக்கிறது. ஏனென்றால் இரு பெரும் நடிகர்களின் படங்களும் மோதும் போது நிச்சயம் ஏதாவது ஒரு படத்திற்கு சிறு சறுக்கள் ஏற்படும். அதனால் போனி கபூர் பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட வேண்டுமா என்று தயங்கி இருக்கிறார்.

ஆனால் முடிவெடுத்த பிறகு பின்வாங்க கூடாது என்பதால் அஜித் அவருக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். மேலும் நான் படத்தின் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த படம் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.

Also read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

அதேபோன்று அவர் போனி கபூரிடம் எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய அந்த ஒத்த வார்த்தை தான் அவரை சுறுசுறுப்பாக அடுத்த கட்ட வேலையை பார்க்க வைத்திருக்கிறது. அதன் பிறகு அவர் உற்சாகத்துடன் பட விநியோகம் தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டாராம். இப்போது படக்குழுவினர் அனைவரும் பரபரப்பாக அடுத்த கட்ட வேலையில் பிஸியாகி இருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட் ரொம்பவும் தாமதமானதில் அஜித் ரசிகர்கள் பயங்கர அதிருப்தியில் இருந்தனர். இதே போன்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக தற்போது பட குழு ட்ரைலரில் அதிக கவனம் செலுத்தி வருகிறதாம். அந்த வகையில் இந்த மாத இறுதியில் துணிவு படத்தின் ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளிவர இருக்கிறது.

Also read: 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்

Trending News