செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றுக்கொண்டுள்ள வித்தியாசமான கதாபாத்திரம்.. அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனாலேயே பல தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படத்தை தயாரிப்பதற்கு முன் வருகின்றன. ஒரு பக்கம் கதாநாயகியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும், மற்றொரு பக்கம் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தையும் தவறவிடாமல் ஏற்று நடித்து வருகிறார். இதனால் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.

தற்போது இவரது கை வரிசையாக 6 படங்கள் உள்ளன. அதில் 1 திரைப்படம்தான் பூமிகா. இதுவரை எந்த ஒரு படத்திலும் நடிக்காத கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்று காரணமாக பல திரைப்படங்கள் வெளியாகமல் உள்ளன. அதனால் இப்படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் கதையும் உள்ளது. அதாவது இயற்கையை பல மனிதர்கள் அழித்து வருகிறார்கள். ஆனால் இயற்கை மனிதர்களை பலி வாங்க நினைத்தால் என்ன ஆகும் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் இயற்கைக்கு ஆதரவாளராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

aishwarya rajesh
aishwarya rajesh

எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இப்படம் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்து உள்ளதால் விரைவில் மீதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படம் வெற்றிஅடைந்து விட்டால் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News