சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

B-யில் தொடங்கி R-ல் முடியும் அருண் விஜய்யின் 2 படங்கள்.. இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா.!

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அருண் விஜய். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் அஜித் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அருண் விஜய்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அருண் விஜய் கதைகளை தேர்வு செய்தே படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளியான தடம், மாஃபியா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது அருண் விஜய் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது யானை, சினம், பார்டர், பாக்ஸர் ஆகிய படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதில் யானை படத்தை பிரபல இயக்குனரும், அருண் விஜய்யின் மாமாவுமான ஹரி இயக்கி வருகிறார். வழக்கமான ஹரி படங்களை போலவே இப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பார்டர் மற்றும் பாக்ஸர் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த இரண்டு படங்களுமே ஆங்கிலத்தில் B-யில் தொடங்கி R-ல் முடிகிறது. எனவே இவ்விரு படங்களும் இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிளாக்பஸ்டர் – ‘B’lock Buste’R’ என்பது  போன்று கனெக்ஷன் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் பாக்ஸர் படத்தை விவேக் என்பவர் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் இப்படத்தை தயாரித்து அவரே இப்படத்தின் வில்லனாகவும் நடிக்கிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

boxer
boxer

அதேபோல் குற்றம் 23 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் கூட்டணி அமைத்துள்ள படம் தான் பார்டர். இதில் அருண் விஜய் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை ரெஜினா கெசண்டரா மற்றும் ஸ்டீபி பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

Trending News