எனக்கு ஆப்பு நானே வைப்பேன்னு துடிக்கும் ஜீவா.. தங்கத்தட்டு வாழ்க்கையில் ஊறிப்போன சேவர்கொடி

ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரியின் வாரிசு. இதை வைத்து சினிமாவில் எளிதாக நுழைந்தார். வந்த புதிதில் சில படங்கள் இவருக்கு கை கொடுத்தது ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக இவருக்கு ஓடிய படம் “என்றென்றும் புன்னகை” அதுவும் 2013 ஆம் ஆண்டு.

2018 ஆம் ஆண்டு இவருக்கு கலகலப்பு 2 படம் கை கொடுத்தாலும் அதன் பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடவில்லை. இப்பொழுது இவர் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படமான சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக, அதன் இயக்குனர் கே ஜே ஆர் ராஜேஷ், இவரை அணுகியுள்ளார்.

ஜீவா, எஸ்எம்எஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நாலரை கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். இதனால் ஆடிப் போன ராஜேஷ் அந்தப் படத்தை எடுக்கும் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டார். ஏற்கனவே ஜீவா, சுந்தர் சி இடம் கலகலப்பு 3 இல் நடிக்க 4 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். அதனால் அவரும் அந்தப் படத்தில் வேறொரு ஹீரோவை கமிட் செய்து விட்டார்.

தங்கத்தட்டு வாழ்க்கையில் ஊறிப்போன சேவர்கொடி

இப்படி வரும் நல்ல படங்களை எல்லாம் அதிக சம்பளம் கேட்பதன் மூலம் இழந்து வருகிறார் ஜீவா . பிறக்கும்போதே செல்வ செழிப்பு மிக்க தங்கத்தட்டில் பிறந்ததால், இது இல்லை என்றால் வேறொன்று என வந்த வாய்ப்புகளை எல்லாம் தனக்குத்தானே உதாசினம் செய்கிறார் நண்பன் பட சேவர் கொடி செந்தில்.

எல்லாவற்றுக்கும் மேலாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது நூறாவது படத்தை விஜய் போல் பெரிய ஹீரோவை வைத்து தயாரிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. அந்த சாதனையை நிகழ்த்திய பிறகு அதன் உரிமையாளர் ஜீவாவின் தந்தையாகிய ஆர். பி சௌத்ரி அந்த நிறுவனத்தை, ஜீவாவிடம் ஒப்படைக்கவிருக்கிறாராம்.