தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற அதிரடி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சியில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டியவர் தான் நடிகர் போஸ் வெங்கட். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகை சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது தேஜாசுவின் என்ற ஒரு மகனும் மற்றும் பவதாரணி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
எனவே இவர்களது குடும்பம் புகைப்படமானது தற்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் போஸ் தனது 17வது வயதில் நடிப்பதற்காக சென்னை வந்தவர். இவரின் கடின உழைப்பாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதாலும் திரைஉலகில் பிரபலமடைந்தார்.
நடிகர் போஸ் மெட்டி ஒளி என்னும் சீரியலின் மூலம் திரையுலகிற்கு வந்தவர். ஈரநிலம், சிந்தாமல் சிதறாமல், நகரம், கோ, சிவாஜி, ராஜாதிராஜா, சிங்கம், தெனாலிராமன், தொடரி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் திரைப்படங்ள் மட்டுமின்றி மலையாள படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் வைகுண்டபுரம் என்னும் திரைப்படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு குரல் கொடுத்தவர். இதேபோல், பல்வேறு படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ‘கன்னிமாடம்’ என்னும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட்டும் ரோபோ ஷங்கரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே.
நடிகர் ரோபோ சங்கர் அவரது மகளை டிவி ஷோக்களிலும், சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். இதன் பிறகு இளைய தளபதி விஜயுடன் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கரின் மகள் அசத்தலாக நடித்திருப்பார்.
அதேபோல், போஸ் வெங்கட் தனது மகன் மற்றும் மகளை தற்போது விஜய் டிவியில் ஸ்டார் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளார். இதன் மூலம் போஸ் தன்னுடைய பிள்ளைகளை திரை உலகிற்கு விரைவில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.