புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

சூப்பர்ஸ்டார் ஒரு படத்தில் நடிக்க கையெழுத்து போட்டார் என்றால் அப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் முதல் பின்னணி தொழிலாளர்கள் வரை அனைவரின் வாழ்க்கையும் செட்டில் எனலாம். அதிலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு ராஜா வாழ்க்கைதான். அதற்கான காரணம் சூப்பர்ஸ்டார் படங்கள் எப்போதுமே கோடி கணக்கில் வசூலை வாரி குவிக்கும்.

அந்த வகையில், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். ரஜினியின் 169 வது படமான இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் முடிவடைய உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டாரின் தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

Also Read: அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கும் லோகேஷ், அடுத்தபடியாக கார்த்தியின் கைதி 2, உலகநாயகனின் விக்ரம் 3 உள்ளிட்ட படங்களை இயக்க மும்முரமாக உள்ளார். இந்நிலையில், ரஜினியின் 171 வது படமும் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக உருவாகும் எனவும், இதில் அஜித், விஜய் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இப்படம் ரஜினி நடிக்கும் கடைசி படமாக கூட இருக்கலாம் என்பதால், அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அதிலும் முக்கியமாக யார் தலைவர்171 படத்தை தயாரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை தருகிறோம் என கூறி ரஜினியின் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தற்போது போட்டிப்போட்டு பேசி வருகின்றனர். மேலும் இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகரின் படத்திற்கு இத்தனை தயாரிப்பாளர்கள் போட்டிப் போடுவது இதுவே முதன் முறையாகும்.

Also Read: பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

அந்த வகையில், இந்த லிஸ்டில் முதலாவதாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிறீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் லலித், தொடர்ந்து ரஜினி படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த அக்கடு தேசத்து இயக்குனரான தில்ராஜு உள்ளிட்டோர் முதல் வரிசையில் போட்டிப் போட்டுக்கொண்டு லோகேஷிடம் தலைவர் 171 படத்தை தயாரிக்க மும்முரமாக உள்ளனர்.

அடுத்தபடியாக கன்னட திரையுலகையே உலகுக்கு பெருமை சேர்த்த கே.ஜி.எப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹும்ப்லே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. மேலும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தயாரித்த டிவிவி என்டேர்டைன்மெண்ட் நிறுவனமும், புஷ்பா, புஷ்பா2 உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு நிறுவனமும் லோகேஷ் கனகராஜிடம் தலைவர்171 படத்தை தயாரிக்க ஆவல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே ஹீரோ.. புது ட்ரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்

Trending News