திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷ், சிவகார்த்திகேயனின் ஆணிவேரை பிடுங்கிய சிம்பு.. இனி எல்லாமே பத்து தல ஆட்டம் தான்

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான சிம்புவை விட தனுஷ், சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே தனக்கான இடத்தை பிடித்துள்ளனர். சிம்பு தொடர் தோல்வி கொடுத்து வந்த நிலையில் இவர்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் எஸ்டிஆர்யை பின்னுக்கு தள்ளி முன்னணி இடத்தை தனுஷ், சிவகார்த்திகேயன் பிடித்து விட்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படம் சிம்புவை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தது. அதைதொடர்ந்து வெந்து தணிந்தது காடு என பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததால் அவரது மார்க்கெட் உயரத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சிம்புக்கு பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து வந்தனர்.

Also Read : பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்-சிம்பு கூட்டணி.. கோடம்பாக்கத்தை பரபரப்பாகிய அப்டேட்

பொதுவாக அஜித் மற்றும் சிம்பு போன்ற குறிப்பிட்ட ஹீரோக்களுக்கு யுவன் சிறப்பாக இசையமைப்பார். இவர்களுக்கு பல ஹிட் படங்களையும் தொடர்ந்து கொடுத்துள்ளார். ஆனால் இந்த லிஸ்டில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடம்பெறவில்லை.

என்னவென்றால் இந்த இரண்டு ஹீரோக்களுக்குமே அனிருத் தான் அருமையான பாடல்களை கொடுத்து வருகிறார். இவர்கள் நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இவர்கள் காம்போவில் படம் உருவானாலே 80 சதவீதம் படம் ஹிட்.

Also Read : விஜய் போல் சிம்புவும் கொடுக்கும் முக்கியத்துவம்.. மொத்த நெட்வொர்க்கையும் வளைக்கப் போகும் பத்துதல

ஆனால் இப்போது சிம்பு தனது படத்தில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். இந்த விஷயம் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏனென்றால் இவர்களுடைய படத்தில் அனிருத் இசை தான் ஆணிவேராக இருந்து வருகிறது. இப்போது சிம்புவுடன் கூட்டணி போட்போட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை அனிருத் கொடுத்து விட்டால் அவ்வளவு தான்.

அதன்பிறகு சிம்பு, அனிருத் கூட்டணியிலேயே அடுத்தடுத்த படங்களும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் தங்கள் படங்களுக்கு இனி அனிருத் இசையமைக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது. ஆகையால் சிம்புவின் பத்து தல ஆட்டம் தான் எங்கும் ஒலிக்க இருக்கிறது.

Also Read : சிம்புவை வைத்து காய் நகர்த்தும் கமல்.. எதிர்பார்க்காத மெகா கூட்டணி.!

Trending News