புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லோகேஷ்-அனிருத் இருவரும் எடுக்கும் புது அவதாரம்.. ஸ்டண்ட் இயக்குனர்களுடன் அடுத்த சம்பவம் ரெடி

Director Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திருக்கு பிறகு 2வது முறையாக விஜய் செய்திருக்கும் தரமான சம்பவம் தான் லியோ. இன்று ரிலீசாகி இருக்கும் இந்த படம் தளபதி ரசிகர்களால் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுகின்றனர். அதுவும் சோறு, தண்ணி கூட  இல்லாமல் படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கு திரையரங்கில் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். சோசியல் மீடியாவிலும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிகிறது.

லியோ படத்தின் ரிலீஸ் வரை தன்னை பற்றி எந்த ஒரு  விஷயமும் வெளிவரக் கூடாது என வாயை மூடிக்கொண்டு இருந்த லோகேஷ், இப்போது கிட்டத்தட்ட 70 மணி நேரம் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியை பார்த்த பின்பு லோகேஷ் கனகராஜ் அடுத்த சம்பவத்திற்கு ரெடி ஆகிவிட்டார். இவருடன் அனிருத்தும் இணைந்து புது அவதாரம் எடுத்துள்ளார்.

சமீப காலமாகவே லோகேஷ் திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி உலா வந்தது. ஆனால் அது இப்போது உறுதியாகிவிட்டது. லோகேஷ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் படத்தில் விளையாட்டு வீரராக தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். இவர் மட்டுமல்ல இவருடன்  அனிருத்-தும் இணைந்து அந்த படத்தில் நடிக்கிறார்.

பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களாக இருக்கும் இரட்டையர்கள் அன்பறிவ் தான் லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகின்றனர்.  இவர்கள் தற்போது முன்னணி நடிகர்களின் ஆக்சன் படங்களில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிப்புரிகின்றனர். இந்நிலையில் தங்களின் நெருங்கிய நண்பர்களான லோகேஷ் மற்றும்  அனிருத் இருவரையும் ஹீரோவாக வைத்து ஒரு ஆக்சன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளது. லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் லோகேஷ் இந்த  படத்திற்கு ஏற்ற கெட்டப்பிற்கு மாறப் போகிறார். அதிலும் இதில் லோகேஷ் ஒரு பாக்ஸராக நடிக்க உள்ளதால் அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக லோகேஷுக்கு பாக்ஸிங் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் உடனே நடிக்கிறேன் என்றும் அன்பறிவ்-க்கு வாக்கு கொடுத்து விட்டார். இந்த படத்தில் லோகேஷ், அனிருத் உடன் இன்னும் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில்  வெளியாகும்.

Trending News