திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மலேசியாவில் மையம் கொண்டுள்ள சிம்பு, சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணமாம்

Simbu Sivakarthikeyan: சிம்பு தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி கொடுத்த நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் மாநாடு படத்திற்கு பிறகு மார்க்கெட் உயர்ந்த நிலையில் சம்பளத்தையும் அதிகபடியாக உயர்த்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு திடீரென மலேசியா சென்று இருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தற்போது மலேசியாவில் தான் இருக்கிறாராம். நாளை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை சிவகார்த்திகேயன் படுஜோராக செய்து வருகிறார்.

Also Read : ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து.

அந்த வகையில் இன்று மலேசியாவில் நடைபெற்ற மாவீரன் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் அங்குள்ள ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும் சிம்பு அங்கு செல்வதற்கான ஒரு காரணமும் இருக்கிறது.

அதாவது மலேசியாவில் யுவன் சங்கர் ராஜா மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறாராம். இதற்காக தான் தனது குடும்பத்துடன் சிம்பு மலேசியா சென்று இருக்கிறார். மேலும் அந்த விழாவில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தரும் பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட சிவகார்த்திகேயன்.. சுஹாசினி போல் செய்த தவறு

மேலும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் சிம்புவும் தனது பங்குக்கு பாட இருக்கிறார். இவ்வாறு சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு இருவரும் மலேசியாவில் மையம் கொண்ட இருந்தாலும் வெவ்வேறு காரணங்களுக்காக அங்கு சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு நாளை மாவீரன் வெளியாவதால் சிவகார்த்திகேயன் மிகுந்த பதத்துடன் இருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் இடத்தில் இப்படம் 100 சதவீதம் வெற்றி பெறும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நம்பிக்கை வெற்றி பெருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : பிரின்ஸ் படத்தால் தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட ஏணியை வாரி விடுவதா?

Trending News