புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2022-ல் அதிகம் வசூல் செய்த இந்திய படம்.. மிரண்டு போன 1200 கோடி வசூல்!

இந்திய அளவில் 2022-ல் இதுவரை வெளியான எல்லா திரைப்படங்களையும் விட பாக்ஸ் ஆபீஸில் 1200 கோடி வசூலைத் தாண்டி இருப்பது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பான் இந்தியா திரைப்படமாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 ஏப்ரல் 14ஆம் தேதி திரையிடப்பட்டு வசூலில் அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறது.

2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தப் படத்திற்கு பிறகு வெளிவந்த எல்லா படங்களையும் தோற்கடித்து இந்தியாவில் மட்டும் 1000 கோடிக்கு மேல்  ஒட்டு மொத்த வசூலை ஈட்டி இருக்கிறது.

அதுமட்டுமின்றி இதுவரை 1200 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கேஜிஎப் 2 தென்னிந்தியாவில் மட்டும் 680 கோடி வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேஜிஎப் வெளியான 50 நாட்களில் மட்டும் உலக அளவில் 1,250 கோடி வசூலை நெருங்கி உள்ளது.

அதுவும் இந்த திரைப்படம் வெளியான முதல் ஐந்து வாரங்களில் 1210.53 கோடியும், ஆறாவது வாரத்தில் 19.84 கோடியும் வசூலை ஈட்டி இருந்தது. இரண்டாவது வாரத்தில் ஈட்டிய வசூலுடன் மொத்தமாக 7 வாரங்களில் மட்டும் 1240. 95 கோடி வசூல் செய்தது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான எந்த படமும் செய்யாத அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

80 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் ரசிகர்களின் பேராதரவுடன் கேஜிஎப் 2 உச்சம் பெற்றிருப்பது தற்போது சினிமா திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மேலும் சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகனாக சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த கன்னட நடிகர் யாஷ் தற்போது உலகறிந்த பான் இந்திய நடிகராக கேஜிஎப் படத்தின் மூலம் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி உச்சம் பெற்றிருக்கிறார்.

Trending News