Mark Antony Collection Report: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் நேற்று மார்க் ஆண்டனி வெளியானது. ட்ரெய்லரிலேயே பலரின் புருவத்தையும் உயர்த்தி எதிர்பார்ப்பை எகிற வைத்த இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிலும் விஷாலுக்கு இந்த மார்க் ஆண்டனி மிகச் சிறந்த கம்பேக்காக அமைந்திருக்கிறது. அதேபோன்று எஸ் ஜே சூர்யாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் படத்தை தாங்கிப் பிடித்துள்ளது. என்ன மனுஷன்பா இவரு, எங்க கேப் கிடைத்தாலும் ஸ்கோர் செய்து விடுகிறாரே என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அவருடைய அலப்பறை.
Also read: 2K கிட்சுக்கு கிடைத்த சில்க் தரிசனம்.. தியேட்டரையே அலறவிட்ட மார்க் ஆண்டனி
அது மட்டுமல்லாமல் சில்க் வரும் காட்சி, இடைவேளை ட்விஸ்ட், கிளைமேக்ஸ் என அனைத்துமே ரகளையாக இருப்பதாக எல்லா பக்கம் இருந்தும் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படம் முழுவதும் ஹியூமர் கலந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்திருப்பது தான்.
அதனாலேயே நேற்றைய தினத்தை விட இன்று தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் மார்க் ஆண்டனி முதல் நாளிலேயே 9 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் முதல் நாளில் இந்த அளவுக்கு வசூல் பெற்றிருப்பது படகுழுவினருக்கு ஒரு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
Also read: ஜெயிக்கிற லாஜிக்கை ஒரு வழியாக கண்டுபிடிச்ச விஷால்.. விட்டுக் கொடுத்து கெட்டுப் போகாத மார்க் ஆண்டனி
அதைத்தொடர்ந்து வார இறுதி நாட்கள், விநாயகர் சதுர்த்தி விடுமுறை என அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததும் இந்த வசூலுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
அந்த வகையில் விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் அலப்பறை தியேட்டரையே இப்போது அல்லோலப்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் மார்க் ஆண்டனி படத்திற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஷாலுக்கான வெற்றியாக அமைந்துள்ளது.