Gossip: இந்த ஹீரோ நடித்தாலே அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். அதே போல் இவருடைய படத்தை வாங்க நீ நான் என போட்டி போட்டு கொண்டு வருவார்கள்.
அந்த அளவுக்கு வியாபாரம் ரிலீசுக்கு முன்பே லாபமாக தான் இருக்கும். தற்போது நடிகர் தன் லட்சியத்தை நோக்கி நகர்ந்து உள்ளார். அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் பிரபல வாரிசுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஒரு பக்கம் இருக்கிறது. அதனால் தான் தற்போது நடிகர் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இளம் ஹீரோ படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளாராம்.
டென்ஷனில் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ
ஆனால் அந்த இளம் ஹீரோவுக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. ஏனென்றால் நடிகரின் இடத்தை இவர் பிடித்து விட்டதாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கேற்றார் போல் நடிகரும் ஈகோ பார்க்காமல் இந்த ஹீரோவை தூக்கிவிட்டுள்ளார். அந்த நன்றி எப்போதுமே இளம் நடிகருக்கு இருக்கிறது.
ஆனால் இவர்கள் பிரச்சனையில் தன் தலையை உருட்டுகிறார்களே என்ற கவலை அவருக்கு அதிகமாக இருக்கிறதாம். பெரிய நிறுவனம் முடிவு செய்து விட்டதால் எதுவும் சொல்ல முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.
ஆக மொத்தம் இரு படங்களும் நேருக்கு நேர் மோத போவது உறுதி. அதில் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் கனவா கண்டேன் என்ற டென்ஷனில் நடிகர் ஒரு பக்கம் இருக்கிறாராம்.
இருந்தாலும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படியே மோதல் இருந்தாலும் நடிகரின் படம் சம்பவம் செய்யும் என்கின்றனர்.