சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த பிரம்மாஸ்திரம்.. வாயடைக்கச் செய்யும் வசூல்

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகி பாய்காட் பிரச்சாரத்தை கடந்து வெற்றியை ருசித்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் சமீபகாலமாக அமீர்கான், டாப்ஸி, அக்ஷய்குமார் உள்ளிட்டோரின் படங்களை பாய்காட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் 2022 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், பிரம்மாஸ்திரம் தான் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.

Also Read: 410 கோடிக்கு விழுந்த அடி.. பிரம்மாஸ்திரம், டிவிட்டர் விமர்சனம்

410 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படம் முதல் நாளில் 75 கோடியும், இரண்டாம் நாளில் 150 கோடியும் வசூலித்து முதல் வார முடிவில் 225 கோடியை தட்டி தூக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் பெரும்நம்பிக்கை அளித்துள்ள இந்த பிரம்மாஸ்திரம் 250 கோடி வசூலை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப், விக்ரம் படங்களில் விதவிதமான துப்பாக்கிகளை வைத்து ஹீரோக்கள் வித்தை காட்டியது போல இந்தப் படத்தில் இடிகாச அஸ்திரங்களையே கையில் ஏந்தி கதாநாயகன் ரன்பீர் கபூர் மிரட்டி உள்ளார்.

Also Read: தொடர்ந்து அடிவாங்கும் பாலிவுட் ஹீரோக்கள்.. 410 கோடி பட்ஜெட் இந்த படமாவது தப்பிக்குமா?

இந்தப்படத்தின் மூலம் கதாநாயகன் ரன்பீர் கபூருக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஓடிடி உரிமையிலும் பிரம்மாஸ்திரம் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் பிரம்மாஸ்திரம் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் 150 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. இதன்பிறகு வெளியாகும் படங்களில் பாலிவுட் பாய்காட் பிரச்சனை வராத அளவுக்கு பிரம்மாஸ்திரம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தற்போதுதான் ஹிந்தி பிரபலங்கள் பெருமூச்சு விட்டு, பாலிவுட் சந்தித்த சரிவை மீண்டும் மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

Also Read: முன்னாள் காதலிக்கு 2.6 கோடி பரிசு கொடுத்த ரன்வீர்.. போட்டி போட்டு சல்மான்கான் என்ன செய்தார் தெரியுமா.?

Trending News