விடாமுயற்சி என்று எந்த நேரம் பெயர் வைத்தார்களோ, இன்று வரை படம் இழுபறி தான். அதுமட்டுமின்றி தனது இரண்டு கரங்களாலும், லைக்கா தொடர்ந்து பிரச்சனைகளை டீல் செய்து வருகின்றது. முதலில் funding-ல் பிரச்சனை.. பிறகு அஜித்தின் கால் ஷீட்-ல் பிரச்சனை.. பிறகு இயக்குனருக்கும் ஹீரோவுக்கு பிரச்சனையை. இப்படி தொடர்ந்து இழுத்தடித்தபடி இருந்த இந்த படத்துக்கு எண்டு கார்டு போட்டு விட்டது Netflix நிறுவனம்.
பெண்களுக்குள் படத்தை கொடுத்தால் கொடுங்கள், இல்லையென்றால், நீங்களே உங்கள் வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் போட்டு பார்த்துக்கொள்ளுங்க என்று கூறிவிட்டது. இதை தொடர்ந்து தான் வேகவேகமாக தற்போது இறுதிக்கட்டப்படப்பிடிப்பை எட்டியுள்ளார்கள். தற்போது படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே கூறலாம்.
முற்றிய Rights பஞ்சாயத்து..
இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் இந்த படம் breakdown போல உள்ளது என்று கொளுத்தி போட ஆரம்பித்தனர். ஆனால் இதுவரை இது ஒரு official remake என்று படக்குழுவினர் கூறவில்லை.
இந்த நிலையில், தற்போது breakdown படக்குழுவினர், ரைட்ஸ் வாங்காத காரணத்தினால் லைக்காவிடம் 150 கோடி கேட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் உண்மையில், இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பே breakdown படக்குழுவினரிடம் லைக்கா பேசிவிட்டது. ஆனால் அதற்கான பணத்தை எதுவும் கொடுக்கவில்லை.
படம் முடிந்த பிறகு, படத்தை பார்த்துவிட்டு, நீங்கள் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் லைக்கா சுபாஷ்கரன். அதனால் இன்று இந்த படத்தை பார்த்துவிட்டு, எந்த அளவுக்கு breakdown தழுவல் இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு ரைட்ஸ் தொகையை கூறுவார்களாம்.