ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அகம் ஒன்று பேசி, புறம் ஒன்று செய்யும் எதிர்க்கட்சி.. ஆர்எஸ் பாரதி வழக்கில் வெட்டவெளிச்சமான உண்மைகள்!

‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது திமுக போட்ட பிச்சை’ என்ற இழிவான கருத்தை, நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்பி ஆர்எஸ் பாரதி பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

இவருடைய இந்த பேச்சுக்கு பலருடைய தரப்பிலிருந்தும் கண்டனம் ஆர்ப்பாட்டம் எழுந்தது. அதன்பின் அவர் மீது ஆதிதிராவிட மக்கள் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி சதீஷ்குமார், ‘கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் மேடையில் எப்படி பேசுவது என்பதை புரிந்து கொண்டு, இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் ஆர்எஸ் பாரதி க்கு எதிராக போடப்பட்ட வழக்கில், பட்டியல் இன மக்களை இழிவாக பேசுவதற்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி, இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்து பாரதியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

RS-Bharadthi

ஆகையால் திமுக எம்பியின் இந்த செயலின் மூலம பல உண்மைகள் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் பொய்யான வேஷம் தற்போது வெளிப்பட்டுவிட்டது.

இது மட்டுமில்லாமல் தர்மபுரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி பங்கு பிரச்சார கூட்டத்தின்போது பேசிய பெண் ஒருவர், ‘தான் ஒரு அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனவும் அதனால் அனேக இடங்களில் தங்களை திமுகவினரை கட்சிக்குள் புறக்கணிக்கின்றனர் எனவும் மனம் நொந்து கொண்டார். அதன்பின் அவரை ஆரத்தழுவி கட்டியணைத்து, போலி நாடகத்தை அரங்கேற்றி சமாதானம் செய்தார் கனிமொழி.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக எம்பி அந்தியூர் செல்வராஜ் மேடையிலிருந்து கீழே அமரவைத்து இழிவுபடுத்திய செயல் அரங்கேறியது.

எனவே கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குகே, இப்படி நடந்திருந்தால் மற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகையால் திமுக அகம் ஒன்று பேசி, புறம் ஒன்று செய்தல் என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News