வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

முத்து போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய பிரௌன் மணி.. கிரேட் எஸ்கேப் ஆன ரோகினி

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணியின் உண்மையான முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்பதற்காக முத்து படாத பாடுபடுகிறார். அதற்காக ரோகினியின் மாமாவாக வந்திருக்கும் பிரௌன் மணியை எப்படியாவது தனியாக கூப்பிட்டு உண்மையெல்லாம் வாங்கி விடனும் என்று பிளான் பண்ணி இருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி முத்து மற்றும் நண்பர் சேர்ந்து ரோகினி மாமாவை தனியாக கூப்பிடுகிறார்கள். இதற்கு சந்தேகப்பட்ட ரோகிணி அவருடைய கணவர் மனோஜை கூடவே அனுப்பி வைக்கிறார். பிறகு போன இடத்தில் மலேசியா மாமா என்பதால் அவரிடம் மது இருக்கா என்று கேட்கிறார்கள். ஆனால் அவர் உள்ளூர் கசாப்பு வெட்டும் நபர் என்பதால் அவரிடம் சரக்கு ஏதும் இல்ல.

பிறகு எப்படியாவது உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் முத்து அங்கு இருக்கும் மதுவை வாங்கி கொடுத்து பிரவுன் மணியை குடிக்க வைக்கிறார். அவரும் மூச்சு முட்ட குடித்துவிட்டு உண்மையை சொல்ல வரும் பொழுது போதையில் மயங்கி விழுகிறார். இதற்கு இடையில் மனோஜையும் குடிக்க வைத்து விடுகிறார். ஆக மொத்தத்தில் முத்து போட்ட பிளான் மொத்தமும் சொதப்பிவிட்டது.

Also read: இந்த வாரம் டிஆர்பி-யில் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. ரேங்கிங் லிஸ்டில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல்

இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். ஆனால் மனோஜ் எந்தவித சுயநினைவும் இல்லாமல் போதையில் அப்படியே உறைந்து போய் வருகிறார். வீட்டிற்கு வந்த மனோஜை பார்த்து விஜயா என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அதன் பிறகு தான் தெரிகிறது மனோஜ் குடித்து இருக்கிறார் என்று.

பிறகு வழக்கம் போல் எல்லாத்துக்கும் காரணம் முத்து தான் என்று ஒட்டுமொத்த குடும்பமும் அவரை திட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் முத்து, மனோஜ்க்கு இந்த பழக்கம் எல்லாம் இல்லை வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஊத்திக் கொடுத்தது ரோகிணியின் மாமா. கடைசியில் ஒட்டுமொத்த குடும்பத்திலிருந்தும் ரோகிணி தப்பித்துக் கொண்டு வருகிறார். இப்போதைக்கு ரோகிணி பற்றிய விஷயம் வெளிவர வாய்ப்பு இல்லை.

Also read: விஜயாவை ஆட்டிப்படைக்கும் பாட்டி.. கழுவுற தண்ணில நழுவுற மீனாக எஸ்கேப்பாகும் ரோகினி

Trending News