சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விவேக்கின் காதலி ப்ரூஸை ஞாபகம் இருக்கிறதா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

சினிமாவை பொருத்தவரை பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகாத நடிகைகளும் உள்ளனர். அதேபோல் ஒரு படத்தில் அதுவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகைகளும் உள்ளனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை ப்ரூஸ். மனதை திருடிவிட்டாய் படத்தில் காமெடி நடிகர்கள் வடிவேலுவும், விவேக்கும் மாறி மாறி காதலித்தவர் தான் நடிகை புரூஸ்.

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர்.டி.நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மனதை திருடிவிட்டாய். இப்படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியவர் தான் ப்ரூஸ். இப்படத்தில் ப்ரூஸ்க்காக வடிவேலுவும், விவேக்கும் அடித்துக் கொள்ளும் காட்சிகள் தான் படத்தில் சிறந்த காமெடி காட்சிகளாக இடம் பெற்றிருந்தது.

கடைசியில் விவேக் ப்ரூஸை உஷார் செய்து திருமணம் செய்து விடுவார். ஆனால், ப்ரூஸ்க்கு இருப்பது கட்டைக் கால் என்பது பின்னர் தான் விவேக்கிற்கு தெரியவரும். இப்படமும், இப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.

bruce
bruce

ப்ரூஸ்ஸின் உண்மையான பெயர் என்ன என்று தெரியவில்லை. அதேபோல் தற்போது இவர் என்னவானார் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்களும் தெரியவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் ப்ரூஸின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையில் அவர்தானா என்பது சந்தேகமாகவே உள்ளது.

Trending News