சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒரு படகோட்டி கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். மேலும் கதைப்படி கிராமத்தில் உள்ள எல்லா வேலைகளையும் சூர்யாவே செய்வதுபோல் காட்டப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யா, பாலா இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்ட சூர்யா படப்பிடிப்பில் இருந்த சென்றுவிட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியானது. ஆனால் அதெல்லாம் வதந்தி என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினுக்கு ஒரு டூரிஸ்ட் கைடு கதாபாத்திரமாம். இதனால் இந்த படத்திற்கு நிறைய வெளிநாட்டு ஆட்கள் தேவைபடுகிறது. இதனால் பாலா சீனா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இப்படத்தில் நடிக்க துணை நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்துள்ளாராம்.
மேலும், அவர்களுக்கு ஒரே ரூம் கொடுக்காமல், ஒவ்வொருவருக்கும் தனியாக ரூம் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். அவர்களுக்கு சாப்பாடு, சம்பளம் என அதிகம் செலவாகும்வதால் படத்தின் பட்ஜெட்டை விட இப்போது அதிகமாக செலவாகி வருகிறது.
இதனால் சூர்யா என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார். பாலாவின் படங்கள் எப்போதுமே கம்மியான பட்ஜெட்டில் தான் உருவாகும். முதல் முதலாக இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இப்போது படப்பிடிப்பு நடத்தும் கன்னியாகுமரியில் ஏராளமான வெளிநாட்டவர்கள் வருவார்கள்.
அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பாலா சில காட்சிகளை எடுத்து இருக்கலாம். ஆனால் பாலா எல்லா இடத்திலும் பெர்பெக்சன் பார்க்கக்கூடியவர். அதனால்தான் மெனக்கெட்டு வெளிநாட்டிலிருந்து நடிகர், நடிகைகளை வர வைத்துள்ளார்.