வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் 7 பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய எபிசோடில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு லட்டு இரண்டு ட்ரேகளில் அனுப்பப்பட்டது. லட்டில் ஸ்டார் மட்டுமின்றி ஆப்பையும் சேர்த்து அனுப்பினார் நமது பிக் பாஸ்.

பிரண்ட்ஷிப்பா இருக்கிறவங்களுக்கு ப்ளூ ட்ரேல உள்ள லட்டும் எதிரியா நினைக்கிறவங்களுக்கு ரெட் ட்ரேல உள்ள லட்டும் கொடுங்கன்னு சொல்லி, லட்டு வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் லட்டை பரிமாறிக் கொண்டிருந்தனர். விசித்ரா அதிகமாக லட்டை வாங்கினார். அவருக்கு இரண்டு ஸ்டார் கிடைத்தது.

அனைவரும் பூர்ணிமா மற்றும் மாயா யாருக்கு தங்களது லட்டை யாருக்கு கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பூர்ணிமா அர்ச்சனாவுக்கும் மாயா ரவீனாவுக்கும் லட்டை பரிமாறிக் கொண்டதன் மூலம் தனது டார்கெட்டை( ஆடு) பிக்ஸ் பண்ணி உள்ளனர்.

Also read: என்னது நரியா, ஹே அமுல் பேபி.. விஷ்ணுவை திருப்பி அடிக்கும் கர்மா, கோர்த்து விட்ட பிக்பாஸ்

பூர்ணிமா லட்டை அர்ச்சனாவுக்கு கொடுத்து, உங்க கூட பிரண்டா இருக்க ஆசைப்படுறேன் சொல்லி தனது நரி தந்தரத்தை அரங்கேற்றினார். மாயா லட்டை ரவீனாவுக்கு கொடுத்ததன் மூலம் தனது தற்போதைய டார்கெட் ரவீனா என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்துள்ளார். இதற்கு முந்தைய பட்டாசு டாஸ்கில் பட்டர்பிளை பட்டாசு அர்ச்சனாவுக்கு கொடுத்துவிட்டு இதை நான் ரவீனாவுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று பூர்ணிமா உடன் டிஸ்கஸ் செய்தார்.

இதன் மூலம் மாயா, ரவீனாவுக்கு குழி தோண்டுவது அப்பட்டமாக புரிகிறது. மாயா மற்றும் பூர்ணிமா தன்னுடைய அடுத்த பிளானை எக்ஸிக்யூட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் பூர்ணிமா லட்டை அர்ச்சனாவுக்கு கொடுத்ததன் மூலம் அர்ச்சனாவை லாக் செய்து அர்ச்சனா மூலமாக விசித்ராவுக்கு ஸ்கெட்ச் போட்டு விட்டார்.

இதை கூல் சுரேஷ் ஆமோதித்துள்ளார். சென்ற வாரம் பல்பு வாங்கிய அனைவரும் இந்த வாரம் அதிரடியாக இறங்க திட்டமிட்டுள்ளனர். பூர்ணிமாவின் திட்டம் பலிக்குமா என்பதை இந்த வாரத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

Also read: பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

Trending News