புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணா குகையால் கொடைக்கானலில் ஆகும் பிசினஸ்.. கமல் கூட இவ்வளவு லாபம் பார்க்கல

Business flourishes in Kodaikanal due to Guna Cave: மலைகளின் இளவரசி என கொண்டாடப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு பெயர் போனது.  தென்மாவட்டங்களில் இருக்கும் மக்கள், சுற்றுலா செல்வது என்றால் அவர்களின் முதல் தேர்வு கொடைக்கானல் ஆகத்தான் இருக்கும். நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய உயரமான மலைப்பகுதியாக கண்ணுக்கு குளுமையாக இருப்பதோடு மனதிற்கும் இதத்தை தந்து விடுகிறது. 

தற்போது கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் கூட்டம், கோடை விடுமுறை கூட விடவில்லை, அதற்கு முன் ஏன் இந்தக் கூட்டம்? எதற்கு இந்த களேபரம் என பார்க்கும்போது இவை அனைத்திற்கும் மொத்தமாக உருவம் கொடுத்து நிற்கிறது மஞ்சுமல் பாய்ஸ். 

கடந்த மாதம்  மலையாள இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை, தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடினர். காரணம் என்றுமே அழிவில்லாத நட்பின் உன்னதத்தை சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் சொன்ன விதமே ஆகும். 

கமல் நடிப்பில் வெளிவந்த குணா

1991 ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த குணா திரைப்படத்தில் இடம்பெறும் குகையே இத்திரைப்படத்தின் மையக்கரு ஆனது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் நண்பர்கள் குழு குகையை சுற்றி பார்க்க வந்தபோது, எதிர்பாராத விதமாக குகையின் ஆழத்தில் மாட்டிக் கொள்கிறான் நண்பன் ஒருவன். 

நண்பனை மீட்கும் தோழர்களின் சாகச பயணமாக கண்ணீருடனும் படத்தினுள் கரைய வைத்தது இந்த மஞ்சுமல் பாய்ஸ். இதன் வெற்றியை அடுத்து 2006 ஆண்டு உண்மையிலேயே குகைக்குள் சிக்கிய நண்பனை மீட்டெடுத்த அதே குழு யூடியூப் நிகழ்ச்சி ஒன்றிற்காக மீண்டும் அதே இடத்திற்கு வந்துள்ளது. 

அவர்களை காண மற்றும் செல்பி எடுக்க கொடைக்கானலில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததாம். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதை அடுத்து சுற்றுலா பிசினஸ் களை கட்டுகிறதாம். மேலும் குகையை சுற்றி புது புது கடைகள் ஆரம்பிக்கப்பட்டதாம். 

இன்னும் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் அவர்களை சமாளிக்க காவல்துறையும் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கமல் நடித்த குணா படத்தின் போது கூட இவ்வளவு கூட்டம் இல்லை! இவ்வளவு வியாபாரமாகவில்லை! இப்போது நல்ல லாபம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் மூத்த வணிகர்கள். 

Trending News