வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ப்ரீ பிசினஸில் கல்லா கட்டிய தளபதி 69.. விஜய்க்கு இருக்கும் மாஸ் பவர்

Vijay : இப்போது ஒட்டுமொத்த கோலிவுட்டே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் தளபதி 69. அண்மையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர்.

இது தவிர இன்னும் எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். எப்போதுமே விஜய்யின் படங்கள் ப்ரீ பிசினஸில் பட்டையை கிளப்பும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் படப்பிடிப்பு நடந்த பிறகு தான் படங்கள் விற்கப்படும்.

ஆனால் முதல் முறையாக விஜய் இப்போது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழ் நடிகர்களில் அதிக வெளிநாட்டு ரசிகர்கள் கொண்ட நடிகர் தான் விஜய்.

ஃப்ரீ பிசினஸில் தளபதி 69 படம் செய்த வியாபாரம்

இந்நிலையில் முந்தி அடித்துக்கொண்டு பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் கிட்டத்தட்ட 75 கோடி கொடுத்து தளபதி 69 படத்தை வாங்கியுள்ளனர். அதிலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சில நிபந்தனைகளையும் வைத்து உள்ளது.

அதாவது ஒரே செக்காக பணத்தைக் கேட்டுள்ள நிலையில் அதற்கும் பார்ஸ் நிறுவனம் சம்மதித்ததாம். துபாயில் பிரபல நிறுவனமான இந்நிறுவனம் இப்போது விஜய்யின் தளபதி 69 படத்தை இவ்வளவு விலை கொடுத்து சீக்கிரம் வாங்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் தான் தளபதி 69 படத்திற்கு இவ்வளவு டிமாண்ட் இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வினோத் தொடங்க இருக்கிறார்.

Trending News