ரஜினிகாந்த் 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். 80 களில் இருந்து இப்போது வரை பல நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குப் போட்டியிட்டாலும், இப்போதுவரை அப்பட்டம் அவருக்குப் பொருத்தமானது அவருக்கு மட்டுமே சொந்தமானது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ப இப்போதுவரை முன்னணி இயக்குனர் படங்களில் நடித்து வருவடன், இளம் ஹீரோக்களும் அவருடன் பாக்ஸ் ஆபீஸில் போட்டியிட்டு வருகின்றனர்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க, சன்பிக்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, த.செ.ஞானவேல் இயக்கிய வேட்டையன் படம் வெற்றி பெற்றதை அடுத்து, தனது 73 வயதில் லோகேஷ் கூட்டணியில் ஹேட்ரிக் வெற்றிக் கொடுக்கவும், இப்படத்தை வசூல் வேட்டை நடத்தவும் ரஜினி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிரபல சீரியல் நடிகர் பூவிலங்கு மோகன் கூறியதாவது:
இந்த நிலையில், ரஜினியைப் பற்றிய சுவாரஸ்ய தகவலை பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பாபா பட ஷூட்டிங்கின் போது, ரஜினி என்னிடம் பேசினார். அப்போது, சீரியலில் ஷூட்டிங் எப்படி போகிறது. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்கள். எத்தனை மணி நேரம் ஷூட்டிங் என்ற விவரத்தை எல்லாம் கேட்டார்.
அதற்கு நான், காலை 9 முதல் இரவு 9 மணி வரை ஷூட்டிங்,3 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று பதிலளித்தேன். இதுகுறித்து அவர் கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதன்பின் 2 மாதங்களுக்குப் பிறகு பாபா படத்தில் நடித்ததற்கு எனக்கு செக் வந்தது. அதில் ஒரு நாள் சம்பளம் 3 ஆயிரம் எனக் குறிப்பிட்டிருந்தனர். அப்போதுதான் ரஜினி ஒரு பக்கா பிசினஸ் மேன் என்பது எனக்கு தெரிந்தது என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அந்த உயரத்தில் இருப்பதற்குக் காரணம் இம்மாதிரி குணங்கள் அவரிடம் இருப்பதால்தான். ஆனால் அவரைப் பற்றித் தேவையில்லாத விமர்சனங்கள், சர்ச்சைகளை விமர்சகர்கள் கூறி வருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினியின் பாபா படம் அப்போது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.