ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அஸ்வின் முகத்தை காட்டி வெறுப்பேற்றிய கேமராமேன்.. விழிபிதுங்கி நின்ற விராட் கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வெற்றி யாருக்கு என்ற சுவாரஸ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 2வது போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனை அடுத்து நான்காவது போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தொடரில் இதுவரை எந்த போட்டியிலும்  அஷ்வின் சேர்க்கப்படவில்லை.

Ravi-Cinemapettai.jpg
Ravi-Cinemapettai.jpg

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் நான்காவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறது.  இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி மீது காட்டம் காட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூட இந்த போட்டியில் அஸ்வின் விளையாடுவார், அவருக்கு எதிராக பல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால் அஸ்வின் மறுபடியும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார்.

England-Cinemapettai.jpg
England-Cinemapettai.jpg

இங்கிலாந்து அணி விக்கெட் விழாமல் அபாரமாக விளையாடி கொண்டிருக்கும்போது மைதானத்தில் உள்ள கேமராமேன் அஸ்வின் முகத்தையே காட்டினார். விராட் கோலி என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ரசித்தனர்.

Trending News