வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னது ஆதிபுருஷ் பட்ஜெட்டை வச்சு இன்னொரு ராக்கெட்டை விடலாமா? வைரல் மீம்ஸ் ஆல் உடையும் பிரபாஸ் மார்க்கெட்

நேற்றைய தினம் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் விதமாக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக ராக்கெட்டை அனுப்பிய நாடு என்ற பெருமையும், நிலவில் ராக்கெட் அனுப்பிய நாடுகளில் 4வது நாடு என்ற பெருமையும் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

நிலவில் சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் இறங்க உள்ள அந்த ஒவ்வொரு தருணத்தை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கிட்டத்தட்ட இந்த நேரலையை மட்டும் சுமார் 8 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து பார்க்கப்பட்டு புதிய சாதனையையும் படைத்தது. மேலும் சந்திராயன் 3 குறித்த சாதனையை இந்தியா முழுவதும் உள்ள பல திரைபிரபலங்கள் தங்களது சோசியல் மீடியாக்களில் இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்ட பிரபாஸ்.. தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகன்

இந்நிலையில் சந்திராயன் 3 ராக்கெட்டுக்கு செலவழித்த பட்ஜெட்டை விட தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான பேன் இந்தியா படத்தின் பட்ஜெட் அதிகம் என்ற மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது.

ராமாயண இதிகாச கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியடைந்தது. இதற்கான காரணம் இப்படத்தில் இடம்பெற்ற எந்த கதாபாத்திரமும் இதிகாச கதையில் இருப்பது போல் இல்லாமல் தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

Also Read: ஆதிபுருஷ் கொடுத்த மரண அடி.. 1000 கோடி இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கு சாதாரண பொம்மை படத்தை பாப்பதுபோல் உள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். பிரபாஸின் கேரியரிலேயே மாபெரும் தோல்வியடைந்த இப்படம் கிட்டத்தட்ட 700 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. ஆனால் இப்படத்தை எடுத்து போட்ட காசை கூட எடுக்காமல் போனது தான் கொடுமை.

அந்த வகையில், சந்திராயன் 3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப கிட்டத்தட்ட 615 கோடி வரை மட்டுமே செலவாகியுள்ளது. ஆதிபுருஷ் படத்தை விட 85 கோடி கம்மியான பட்ஜெட்டில் நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது மீம்ஸ்களில் ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட்டும், சந்திராயன் 3 பட்ஜெட்டும் மீம்ஸ்களில் பரவி, பிரபாஸின் மொத்த மார்க்கெட்டையும் சரிக்கும் வகையில் வைரலாகி வருகிறது.

Also Read: ஆள விடுங்கடா சாமி என மாயமான பிரபாஸ்.. ராஜமவுலி எடுத்தா கூட என்னை விட்ருங்கப்பா

Trending News