வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் செய்தது போல் ரஜினியால் செய்ய முடியுமா.? செக் வைத்து சவால் விட்ட பிரபலம்

சூப்பர் ஸ்டார் விவகாரமே முடியாத நிலையில் அடுத்த பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார் பிரபலம் ஒருவர். அதாவது ரஜினியின் ஜெயிலர் படம் இப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதற்கு முன்னதாக படங்கள் செய்த வசூல் சாதனையை இப்படம் முறியடித்து வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் ஜெயிலர் பற்றிய பேச்சு தான்.

மேலும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை வெடித்த நிலையில் ஜெயிலர் படத்தால் ரஜினி தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது விஜய்க்கு வக்காலத்து வாங்கும் விதமாக சினிமா விமர்சகர் ஒருவர் ரஜினி இதை செய்தால் மட்டுமே நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.

Also Read: ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி எப்படி?. ரஜினிய ஃபாலோ பண்ணாலும் அவர மாதிரி ஆயிட முடியாது ப்ரோ

அதாவது பத்திரிக்கையாளரும் மற்றும் சினிமா விமர்சகருமான பிஸ்மி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை வெடிக்க ஆரம்ப புள்ளியாக இருந்தது இவர்தான். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என இவர் கொளுத்தி போட அந்த தீ இணைய முழுக்க பத்தீ எரிய தொடங்கியது.

இப்போதும் பிஸ்மி பேசுகையில் ஜெயிலர் படத்தால் ரஜினியை நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட முடியாது. அதாவது தர்பார், அண்ணாத்த என ரஜினி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். மறுபுறம் விஜய் தன்னுடைய முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துக் வந்தார்.

Also Read: நெல்சனை வளைக்கும் கமல்.. ரஜினி ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் உலகநாயகன்

இதனால் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததால் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அடுத்ததாக லியோ படம் ஜெயிலரை விட மிகப்பெரிய வசூலை பெற வாய்ப்பிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ரஜினி இன்னும் தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் வெற்றியை கொடுத்தால் அவர் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்.

அதில் மாற்றுக் கருத்தை இல்லை என்று சவால் விடும் விதமாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். மேலும் லியோ படம் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் சர்ச்சை இன்னும் வேகம் எடுக்கும் என்று கூறியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கும் படியாக அமைந்திருக்கிறது.

Also Read: சக்கரை ரெடியானதும் மொய்க்கும் தேனீக்கள்.. விஜய் படத்தால் அட்வான்ஸை திரும்பி வாங்கிய அக்கட தேசம்

Trending News