ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இதில் திஷா பதானி, எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வைரலான நிலையில், பொங்கல் & மகர சங்கராந்திக்கு இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சியும் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. பொங்கலுக்கு கேம் சேஞ்சர் படத்துடன் மற்ற படங்கள் போட்டியிடாது என கூறப்பட்டது.
அதன்பின், விடாமுயற்சி படக்குழு அறிவிப்பால், கேம் சேஞ்சர் – விடாமுயற்சி படங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. வழக்கமா பண்டிகை தினங்களில் தமிழில் அஜித் – விஜய் – ரஜினி – கமல் என உச்ச நடிகர்களின் படங்களுக்குத்தான் போட்டி இருக்கும்.
இம்முறை அஜித் – ராம்சரண் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கேம் சேஞ்சரில் வில்லனாக நடித்துள்ள எஸ். ஜே.சூர்யா என்ன சொன்னாருன்னா, ’பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் விடாமுயற்சிக்கு பெரிய ஓபனிங் கிடைச்சாலும் கூட, கேம் சேஞ்சர் ஷங்கரின் படம் என்பதால், இதற்கும் ரசிகர்கள் வருவார்கள்’’ என தெரிவித்தார்.
அதனால் பொங்கலுக்கு சஸ்பென்ஸ், திரில்லிங் ஜர்னரில் உருவாகியிருக்கும் விடாமுயற்சியா, இல்ல அரசியல், பக்கா ஆக்சன் மசாலாவாக உருவாகியுள்ள கேம் சேஞ்சரா எந்தப் படம் ஜெயிக்கும்னு ரசிகர்கள் இப்பவே பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.